என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது டெஸ்ட் போட்டி: 323 ரன்களில் வெற்றி - நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
    X

    2வது டெஸ்ட் போட்டி: 323 ரன்களில் வெற்றி - நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

    • முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • நியூசிலாந்து அணிக்கு 583 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த நியூசிலாந்து அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 378 ரன் எடுத்து இருந்தது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

    முன்னதாக பென் டக்கெட் 92, ஜேக்கப் பெத்தெல் 96 ரன்களை எடுத்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 127 பந்தில் 10 பவுண்டரியுடன் அவர் 100 ரன்களை தொட்டார். 151-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட்-க்கு இது 36-வது சதம் ஆகும்.

    அவர் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்களை குவித்த போது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 583 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 141 ரன்களில் 6 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டாம்புளுன்டல் மட்டுமே போராடினார். அவர் சதம் அடித்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 54.2 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 14 ஆம் தேதி ஹேமில்டனில் தொடங்குகிறது.

    Next Story
    ×