என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 278 ரன்னில் டிக்ளேர் செய்த நியூசிலாந்து
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 278 ரன்னில் டிக்ளேர் செய்த நியூசிலாந்து

    • நியூசிலாந்து அணி 278 ரன்னில் 9 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
    • 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கான்வே அரை சதம் அடித்தார். அவர் 67 ரன்னும், வில்லியம்சன் 37 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். 6-வது வீரராக களம் இறங்கிய மிச்சேல் ஹாயும் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 278 ரன்னில் 9 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இதனையடுத்து 73 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சேம்பல் 14 ரன்களுடனும் ஆண்டர்சன் பிலிப்ஸ் டக் ஆகி வெளியேறினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    Next Story
    ×