என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி.எஸ்.பி. பதவி, ரூ. 34 லட்சம் பரிசு: ரிச்சா கோஷ்க்கு மேற்கு வங்க அரசு கவுரவம்
    X

    டி.எஸ்.பி. பதவி, ரூ. 34 லட்சம் பரிசு: ரிச்சா கோஷ்க்கு மேற்கு வங்க அரசு கவுரவம்

    • மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் ஒரு ரன்னுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற வகையில் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.
    • மம்தா பானர்ஜி டி.எஸ்.பி. நியமனத்திற்கான கடிதத்தை வழங்கினார்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி வாகை சூடிய இந்திய அணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் இடம் பிடித்திருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதனால் மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு 34 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் தங்க பேட், தங்க பந்து ஆகியவையும் வழங்கப்பட்டது.

    அத்துடன் காவல்துறையில் DSP அந்தஸ்தில் பணி, மாநிலத்தின் உயரிய விருதான பங்காபுஷன் விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

    உலக கோப்பையில் 8 இன்னிங்சில் 235 ரன்கள் அடித்தார். இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 24 பந்தில் 34 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 16 பந்தில் 26 ரன்களும் விளாசினார்.

    Next Story
    ×