என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒற்றைய இலக்க ரன்னில் 9 வீரர்கள் அவுட்.. வங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்
- ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 3-0 கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இதில் முதலில் நடந்த டி20 தொடரை வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் சத்ரான் 95 ரன்களும் முகமது நபி 62 ரன்களும் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் சைப் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து விளையாடிய வங்கதேசம் அணி, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் வங்கதேசம் அணி 27.1 ஓவரில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சைப் ஹசன் 43 ரன்கள் எடுத்தார். மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்கதேசத்துக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.






