என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்- முதல் சுற்றில் இந்தியா வெற்றி

- இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று கஜகஸ்தானை சந்தித்தது.
- ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து ஆகியோர் நேர் செட்களில் வெற்றி கண்டனர்.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று கஜகஸ்தானை சந்தித்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து ஆகியோர் நேர் செட்களில் வெற்றி கண்டனர். இதே போல் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவிலும் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூடிய நிலையில் 5-0 என்ற கேம் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.