என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் டி20 போட்டியில் ஹசன் அலி அபாரம் - வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
Byமாலை மலர்19 Nov 2021 7:31 PM GMT
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானின் ஹைதர் அலி, ஷோயப் மாலிக் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
டாக்கா:
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஹோசைன் 36 ரன்னும், மெஹிதி ஹசன் 30 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், முகமது வசீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேசம் அணியினரின் சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் 96 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பகர் சமான், குல்தீஷ் ஷா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாப் கான் 21 ரன்னும், முகமது நவாஸ் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றியது
Next Story
×