search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா
    X
    ஆஸ்திரேலியா

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை திடீரென ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் மோதியதில்லை. முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் இந்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

    இப்பேட்டியைக் காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த போட்டியை ஆஸ்திரேலியா ஒத்தி வைத்துள்ளது. தலிபான்களே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

    ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் போய் விட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவி செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே தலிபான்கள் கூறி விட்டார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தலிபான் மூத்த தலைவர் கூறினர்.

    இதையடுத்தே ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா ஒத்தி வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் தடை விதித்தால் அந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தம் இல்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஹோபர்ட் டெஸ்ட் போட்டியை தள்ளி வைத்துள்ளோம் என்றனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தால், அந்த நாட்டு அணியுடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

    ஆப்கானிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாலியம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×