search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்- ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை
    X

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்- ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை

    ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்ததால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பாகிஸ்தான் அதே அணியை களம் இறக்குகிறது. #INDvWI
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் 66 ரன்கள், 2-வது போட்டியில் 11 ரன்கள், 3-வது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை  3-0 என ஒயிட் வாஷ் செய்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரையும், டி20 தொடரையும் பாகிஸ்தான் வென்றது.

    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான தொடரை முடிந்துள்ள நிலையில் வருகின்ற 31-ந்தேதி முதல் பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.



    நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பகர் சமான், 2. முகமது ஹபீஸ், 3. சஹிப்சடா ஃபர்ஹான், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. ஆசிப் அலி, 7. ஹூசைன் டல்லாட், 8. சர்பிராஸ் அஹமது, 9. ஷதாப் கான், 10. ஷஹீன் ஷா அப்ரிடி, 11. உஸ்மான் கான் ஷன்வாரி, 12. ஹசன் அலி, 13. இமாத் வாசிம், 14. வாகாஸ் மெக்சூட், 15. பஹீம் அஷ்ரப்.

    முதல் டி20 போட்டி அபுதாபியில் 31-ந்தேதியும், 2-வது போட்டி நவம்பரில் துபாயிலும், 3-வது போட்டி நவம்பர் 4-ந்தேதி துபாயிலும் நடக்கிறது. அதன்பின் நவம்பர் 7-ந்தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
    Next Story
    ×