search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஹாக்கியில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம்
    X

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஹாக்கியில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம்

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. #AsianGames2018
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரில், ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

    லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 76 கோல்கள் அடித்து அசத்திய இந்திய அணி, அரை இறுதியில் 6-7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது.  மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டது.

    இதனால், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியில் பலப்பரிட்ச்சை நடத்தின. போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்த 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது

    போட்டியின் 10-வது நிமிடத்தில் சிங்கெல்சனா அடித்த ஷாட்டை பாகிஸ்தான் கோல் கீப்பர் சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியாவின் இரண்டாவது கோல் வாய்ப்பு நழுவியது.

    தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயன்றும் முதல் பாதி நேரம் வரை இரு அணிகளாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

    எனினும் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெணால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்ப்ரீட் சிங் அட்டகாசமான கோலாக மாற்றினார், இதனால் இந்தியா மீண்டும் 2-0 என முன்னிலை பெற்றது.

    இதைத்தொடர்ந்து சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் வீரர் அதிக் முகமது கோல் அடிக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது, ஆனால் கடைசி வரை இரண்டு அணிகளும் அடுத்த கோல் அடிக்காததால் 2-1 எனும் கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

    இதன் மூலம் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. #AsianGames2018
    Next Story
    ×