என் மலர்
செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - வெள்ளிப் பதக்கம் வென்றது இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு ஸ்குவாஷ் இறுதி போட்டியில் ஹாங் காங்கிடம் தோல்வியை தழுவியதால் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. #AsianGames2018
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பிற்பகல் பெண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய அணி, ஹாங் காங் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் ஹாங் காங் அணியிடம் தோல்வி அடைந்தது.
இதனால், இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018

Next Story