search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் 2018 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை
    X

    டிஎன்பிஎல் 2018 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை

    சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி. #CSGvKK #TNPL2018 #PattaiyaKelappu
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வி.ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, அனிருதா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆதித்யா 19 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 28 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

    அடுத்து வந்த மான் பஃவ்னா 31 ரன்களில் ஆட்டமிழக்க, 6-வது வீரராக களம் இறங்கிய ஷாஜகான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் விளாச காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.



    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவர் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன் ஏதும் எடுக்காமல் யோ மகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான சன்னி குமார் சிங் 2 ரன்களில் மோகன் பிரசாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கோபிநாத்துடன் சசிதேவ் ஜோடி சேர்ந்தார் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

    எனினும், சசிதேவ் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய கோபிநாத் 38 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

    அடுத்து களமிறங்கிய கார்த்திக் மற்றும் ஹரிஷ் குமார் முறையே 7 மற்றும் 11 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடித்த்தது. இதனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி.

    அந்த அணியின் தரப்பில் யோ மகேஷ், மோகன் பிரசாத், ராஜ்குமார், லக்‌ஷ்மன் மற்றும் மான் பாஃப்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். காரைக்குடி காளை அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த அனிருதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #CSGvKK #TNPL2018 #PattaiyaKelappu
    Next Story
    ×