என் மலர்

  செய்திகள்

  ஜேசன் ராய் இன்று களம் இறங்குவது சந்தேகம்- தயார் நிலையில் சாம் பில்லிங்ஸ்
  X

  ஜேசன் ராய் இன்று களம் இறங்குவது சந்தேகம்- தயார் நிலையில் சாம் பில்லிங்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஜேசன் ராய் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

  இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று 5 மணிக்கு தொடங்குகிறது. 2-வது போட்டியில் இங்கிலாந்து பீல்டிங் செய்யும்போது தொடக்க வீரர் ஜேசன் ராயின் வலது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.  இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்புதான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

  ஒருவேளை உடற்தகுதி பெறாவிடில் மாற்று வீரரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சாம் பில்லிங்ஸை அவசரமாக அழைத்துள்ளது. ஜேசன் ராய் இந்தியாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 35 பந்தில் 38 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 42 பந்தில் 40 ரன்களும் சேர்த்தார்.
  Next Story
  ×