search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல்- ரூபி திருச்சி வாரியர்ஸ்க்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்
    X

    டிஎன்பிஎல்- ரூபி திருச்சி வாரியர்ஸ்க்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-வது சீசனின் முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ்க்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நிஷாந்த் உடன் ஆர் ரோகித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினாலும், கேப்டன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தினார். அவர் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

    ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×