search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில யூத் கூடைப்பந்து- தமிழக அணிகள் 24-ந்தேதி தேர்வு
    X

    மாநில யூத் கூடைப்பந்து- தமிழக அணிகள் 24-ந்தேதி தேர்வு

    மத்திய பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்டவருக்கான தேசிய ‘யூத்’ கூடைப்பந்து போட்டி செப்டம்பரில் நடக்கிறது. தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு 24-ம் தேதி நடக்கிறது.
    16 வயதுக்குட்பட்டவருக்கான தேசிய ‘யூத்’ கூடைப்பந்து போட்டி செப்டம்பர் 2-வது வாரத்தில் மத்திய பிரதேசத்தில் நடக்கிறது. இதற்கான தமிழக அணியை தேர்வு செய்வதற்கான மாவட்டங்கள் இடையேயான போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடக்கிறது.

    மாநில போட்டிக்கான சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியர் தேர்வு (மண்டலம் 1) வருகிற 24-ந்தேதி மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது. 1-1-2002-க்கு பிறகு பிறந்தவர்கள் வயது சான்றிதழுடன் இந்த தேர்வில் பங்கேற்கலாம் என்று சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ். நிசார் (9840111199) தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×