என் மலர்
செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் போராடி தோல்வி - சானியா முன்னேற்றம்
விம்பிள்டனில் விளையாட தகுதி பெற்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன், ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போராடி தோல்வியடைந்தார்.
லண்டன்:
பிரிட்டன் தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் இரட்டையருக்கான முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில், இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் அவரது ஜோடி ஜாரெட் டொனால்ட்சன் இருவரும் பிரிட்டிஷின் மார்கஸ் மற்றும் ஜெ கிளர்க் ஜோடியை எதிர் கொண்டனர். அதில் அவர்கள் 7-6(4) 7-5 6-7(3) 0-6 3-6 என்ற கணக்கில் பிரிட்டிஷ் அணியுடன் மூன்று மணி 15 நிமிட கடும் போராட்டத்திற்க்கு பின் தோல்வியடைந்தனர்.
இது பற்றி நெடுஞ்செழியன் கூறுகையில், ‘நாங்கள் வெற்றி பாதையில் தான் சென்றோம். இரண்டு செட்களில் நாங்கள் முன்னணியில் இருந்தோம். மூன்றாவது செட்டில் 6-5 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தோம். ஆனால் அதற்கு அடுத்த செட்டில் அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்’ என்றார்.
‘ஜாரெட் உடன் விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் இருவரும் முழு முயற்சியுடன் விளையாடினோம். சில சமயங்களில் விளையாட்டில் சிறிய தவறுகள் இருந்தது. ஆனால் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவேன். இது எனது இரண்டாவது இரட்டையருக்கான போட்டியாகும். இன்னும் அதிக அளவில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு நன்றி’ என்றும் நெடுஞ்செழியன் கூறினார்.
இதற்கிடையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் கிரிஷ்டன் பிலிப்கென்ஸ் ஜோடி வெற்றி பெற்றது. அவர்கள் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் நியோமி ஒஸ்கா மற்றும் சுயா ஷங் ஜோடியை தோற்கடித்தனர்.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் புரவ் ராஜா மற்றும் டிவிஜ் சரண் ஜோடியும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. அவர்கள் முதல் சுற்றில் கைல் எட்மட் மற்றும் ஜோ சோசா ஜோடியை 7-6(2), 3-6, 6-4, 7-6(8) என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

Next Story