search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிபா கான்பெடரேசன் கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி போர்ச்சுக்கல் 3-வது இடம்
    X

    பிபா கான்பெடரேசன் கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி போர்ச்சுக்கல் 3-வது இடம்

    ரஷியாவில் நடைபெற்று வரும் பிபா கான்பெடரேசன் கால்பந்து தொடரில் மெக்சிகோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்துள்ளது போர்ச்சுக்கல்.
    ரஷியாவில் பிபாவின் கான்பெடரேசன் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் சிலி, ஜெர்மனி, போர்ச்சுக்கல் மற்றும் மெக்சிகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதில் மெக்சிகோ, போர்ச்சுக்கல் அணிகள் தோல்வியடைந்தன.

    3-வது இடத்திற்கான போட்டியில் இரு அணிகளும் இன்று மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். போர்ச்சுக்கலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ஆட்ரியன் சில்வா கோலாக்க தவறினார். அதன்பின் இரு அணி வீரர்களுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இதை இரண்டு அணி கோல் கீப்பர்களும் சமார்த்தியமான தடுத்தார்கள்.



    ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் அடித்த பந்தை போர்ச்சுக்கல் வீரர் நேட்டோ காலில் பட்டு ஓன் கோலாக மாறியது. இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலைப் பெற்றது.

    பின்னர் போர்ச்சுக்கல் வீரர்கள் பதில் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. 90 நிமிடத்தில் போர்ச்சுக்கல் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் தடை ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி 91-வது நிமிடத்தில் கேப்டன் பெபே கோல் அடித்தார். இதனால் 1-1 என போட்டி சமநிலையில் முடிந்தது.

    நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 104-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி ஆட்ரியன் சில்வா கோல் அடித்தார். இதனால் போர்ச்சுக்கல் 2-1 என வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    Next Story
    ×