என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவுடன் இன்று மோதல்: கெய்ல் அதிரடி தொடருமா?
    X

    கொல்கத்தாவுடன் இன்று மோதல்: கெய்ல் அதிரடி தொடருமா?

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. கிறிஸ் கெய்லின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
    கொல்கத்தா:

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 19-வது நாளான இன்று இரண்டு இடங்கள் ஆட்டங்கள் நடக்கிறது. ராஜ்கோட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ்- மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    குஜராத் லயன்ஸ் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி புனே, கொல்கத்தாவை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, பெங்களூர் அணிகளிடம் தோற்று இருந்தது.

    பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றிக்காக குஜராத் அணி காத்திருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ரெய்னா, மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், சுமித், ஜடேஜா போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.



    பஞ்சாப் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தல் புனேயை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், மும்பை அணிகளிடம் தோற்றது.

    தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 3-வது வெற்றி பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், ஹசிம் அம்லா, மில்லர், மனன் வோரா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.



    இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் குஜராத்திடம் 180 ரன்னுக்கும் மேல் குவித்து தோற்றதால் கொல்கத்தா அதிர்ச்சியில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் கவனமுடன் விளையாடும். அதே நேரத்தில் கெய்லின் அதிரடியை சமாளிப்பது அந்த அணிக்கு சவாலானதே.

    கொல்கத்தா அணியில் கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.



    பெங்களூர் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தாவை வீழ்த்தி முன்னேற்றம் காணும் ஆர்வத்துடன் உள்ளது.

    கிறிஸ் கெய்ல் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமே. குஜராத்துக்கு எதிராக அவர் 38 பந்தில் 77 ரன் (5 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்தார். 20 ஓவர் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்னை குவித்து சாதனையாளரான கிறிஸ் கெய்லின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

    இதுதவிர கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், கேதர் ஜாதவ், டிரெவிஸ் ஹெட் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் பெங்களூர் அணியில் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டியில் தலா 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×