என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனித்துளியை சமாளிக்க ஈரப்பந்தில் பயிற்சி: ரஷித் கானுக்கு வார்னர் பாராட்டு
    X

    பனித்துளியை சமாளிக்க ஈரப்பந்தில் பயிற்சி: ரஷித் கானுக்கு வார்னர் பாராட்டு

    ரஷித் கான் பனித்துளியை சமாளிக்க ஈரப்பந்தில் பயிற்சி செய்தார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
    ஆப்கானிஸ்தானின் 19 வயதே ஆன சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஐ.பி.எல். ஏலத்தில் 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து ஐதராபாத் அணி அவரை ஏலம் எடுத்தது.

    முதல் முறையாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கினார். பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் ஐ.பி.எல். தொடரில் ரஷித் கானால் என்ன செய்ய முடியும் என்ற கருத்து நிலவியது.

    ஆனால் பெங்களூருவிற்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரஷித் கான். குஜராத்திற்கு எதிரான 2-வது போட்டியில் அசத்தினார். மெக்கல்லம், ரெய்னா போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. மற்ற பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் ரஷித் கான் நான்கு ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

    ரஷித் கானின் பந்து வீச்சை வெகுவாக பாராட்டியுள்ள வார்னர், பனி நேரத்தில் பந்து வீசக் கடினமாக இருக்கும் என்பதால், அதை சமாளிக்க ஈரப்பந்தில் ரஷித் கான் பயிற்சி மேற்கொண்டார் என்று வார்னர் கூறினார்.

    இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘வான்கடே மைதானத்தில் சற்று பனிப்பொழிவு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, 158 ரன்னிற்குள் மும்பை அணியை கட்டுப்படுத்துவது கடினம். வான்கடேவில் பனிப்பொழிவிற்கிடையே பந்து வீசுவது கஷ்டமான பணி. ஆனால், ரஷித் கான் இந்த சூழ்நிலையை நன்றாக புரிந்து சிறப்பாக பந்து வீசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

    போட்டிக்கு முன்பு பந்தை நனைத்து அதில் பயிற்சி மேற்கொண்டார். அந்த பயிற்சி அவருக்கு கைக்கொடுத்தது. பயிற்சியின்போது செய்த வேலையை கட்சிதமாக மைதானத்தில் வெளிப்படுத்தினார். மிகவும் சிறந்த பந்து வீச்சாளர் ரஷித் கான்’’ என்றார்.
    Next Story
    ×