என் மலர்

  செய்திகள்

  உமேஷ் யாதவின் 137 கி.மீ. வேகப் பந்தில் இரண்டாக உடைந்த மேக்ஸ்வெல் பேட்
  X

  உமேஷ் யாதவின் 137 கி.மீ. வேகப் பந்தில் இரண்டாக உடைந்த மேக்ஸ்வெல் பேட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஞ்சி டெஸ்டில் உமேஷ் யாதவ் 137 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து மேக்ஸ்வெல்லின் பேட்டை இரண்டாக உடைத்தது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இதை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். உமேஷ் யாதவ் 137 கி.மீட்டர் வேகத்தில் வீசிய பந்தை மேகஸ்வெல் தடுத்தாடினார். அப்போது அவரது பேட் இரண்டாக உடைந்தது.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம், அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் நகைச்சுவையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.  பின்னர் மேக்ஸ்வெல் அதே ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த இன்னிங்சில் அவர் 104 ரன்கள் சேர்த்தார்.
  Next Story
  ×