search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன்: வாவ்ரிங்காவை வீழ்த்தி ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: வாவ்ரிங்காவை வீழ்த்தி ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    ஆஸ்திரேலிய ஓபனில் வாவ்ரிங்காவை வீழ்த்தி ரோஜர் பெடரர் 7 வருடத்திற்குப்பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    35 வயதாகும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது கிடையாது. 2014-ல் விம்பிள்டனிலும், 2015-ல் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனிலும் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தார்.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபனில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் சக நாட்டு வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்டுகளையும் ரோஜர் பெடரர் 7-5, 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரண்டு செட்டுகளையும் 1-6, 4-6 என இழந்தார்.

    இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை உறுதி செய்யும் 5-வது மற்றும் கடைசி செட்டில் இருவரும் ஆக்ரோஷசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், ரோஜர் பெடரர் 6-3 என அந்த செட்டை கைப்பற்றி வாவ்ரிங்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் நடால் அல்லது டிமிட்ரோவை எதிர்கொள்ள இருக்கிறார்.  1974-க்குப் பிறகு அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.
    Next Story
    ×