என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் சோகம்: தொடரையும் வென்றது தென் ஆப்பிரிக்க
    X

    ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் சோகம்: தொடரையும் வென்றது தென் ஆப்பிரிக்க

    ஹோபர்ட்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    ஹோபர்ட்:

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து இருந்தது. குவாஜா 56 ரன்னிலும், கேப்டன் சுமித் 18 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 60.1 ஓவர்களில் 161 ரன்னில் சுருண்டது.

    இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குவாஜா அதிக பட்சமாக 64 ரன் எடுத்தார். அபோட் மிகவும் அபாரமாக பந்து வீசி 77 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ரபடாவுக்கு 4 விக்கெட் கிடைத்தது.

    ஆஸ்திரேலியாவின் 3-வது விக்கெட் (குவாஜா) 129 ரன்னாக இருந்த போது விழுந்தது. அந்த அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் 32 ரன்களே எடுத்தது மிகவும் பரிதாபமானது.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 177 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    இந்த தோல்வி ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை இழந்து சோகத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 2014-ம் ஆண்டு சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விக்கு தற்போது சரியான பதிலடி கொடுத்தது.

    ஹோபர்ட் டெஸ்டை பொறுத்தவரை 3 நாட்களில் முடிவு தெரிந்து விட்டது. 2-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு இருந்தது. நாளைய கடைசிநாள் ஆட்டத்துக்கு செல்லாமல் ஆஸ்திரேலியா சரண்டர் ஆகி விட்டது.

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி அடிலெய்தல் தொடர்கிறது.

    Next Story
    ×