என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது.
    சென்னை :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் இந்த ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் நடக்கிறது.

    இருபாலருக்கும் நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், ஜூடோ, வாள்சண்டை, பளுதூக்குதல், பீச் வாலிபால், தேக்வாண்டோ ஆகியவை வருகிற 17-ந் தேதியும், ஹேண்ட்பால், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவை 20-ந் தேதியும், குத்துச்சண்டை 28, 29-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் 1-1-1996-க்கு பிறகு பிறந்தவர்களாகவும், 31-12-2016 அன்று 21 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்பதுடன், சென்னையில் பிறந்தவராகவோ அல்லது படிப்பவராகவோ அல்லது பணிபுரிபவராகவோ இருக்க வேண்டும். இதற்குரிய சான்றிதழை செனாய்நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பெறுபவர்கள் மற்றும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுவதுடன், மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெறுவார்கள்.இந்த தகவலை சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×