search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நர்சிங் யாதவ் விவகாரம்: விளையாட்டு ஆணையத்தின் ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கு தொடர்பு?
    X

    நர்சிங் யாதவ் விவகாரம்: விளையாட்டு ஆணையத்தின் ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கு தொடர்பு?

    நர்சிங் யாதவ் விவகாரம்: விளையாட்டு ஆணைய, ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நர்சிங் யாதவ். ஊக்க மருந்து விவகாரத்தில் இவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அவருக்கு இந்த தடையை விதித்தது.

    இதன் காரணமாக நர்சிங் யாதவ் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில் நர்சிங் யாதவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டதற்கு இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் (நாடா) ஜுனியர் அதிகாரிகளே காரணம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செயலாளர் பிரிஜ் பூசன் சிங் கூறியதாவது-

    நர்சிங் யாதவிடம் குறுகிய காலத்தில் 2 முறை ஊக்க மருந்து சோதனை நடத்தியது ஏன் என்று சர்வதேச தடுப்பு மையம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பிடம் கேட்டுள்ளது.

    இதற்கு பதில் அளித்த தேசிய ஊக்க மருந்து அமைப்பு சோன்பட்டில் உள்ள சாய் மைய வீரர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக ஜூனியர் அலுவலர் புகார் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையிலே சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×