என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சமாளிக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப்?
    X

    டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சமாளிக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப்?

    பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. புதிய அணிகளான புனே மற்றும் குஜராத்தை மட்டுமே பஞ்சாப் அணி வென்று இருக்கிறது. டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியில் கேப்டன் ஜாகீர்கான் கடந்த லீக் ஆட்டத்தில் ஆடாதது அந்த அணியின் பந்து வீச்சில் தொய்வை ஏற்படுத்தியது. இதனால் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் புனேயிடம் தோல்வியை சந்தித்தது.

    டெல்லி அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. கடைசி ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்தி டெல்லி அணி வெற்றிக்காக முழு பலத்தையும் வெளிப்படுத்தும். முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை சாய்த்து இருந்தது. அந்த வெற்றி ஆதிக்கத்தை தொடர டெல்லி அணி முயலும். வலுவான டெல்லி அணியின் சவாலை பஞ்சாப் அணி தாக்குப்பிடித்து சரிவில் இருந்து மீண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல.
    Next Story
    ×