என் மலர்
செய்திகள்

வெற்றி பார்முலா தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பஞ்சாப் அணி
4 தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணி ‘வெற்றி பார்முலா’ தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
4 தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணி ‘வெற்றி பார்முலா’ தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மனன் வோராவும், ஷான் மார்சும் ஓரளவு ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால் எதிர்பார்க்கப்படும் கேப்டன் டேவிட் மில்லர், மேக்ஸ்வெல் ஆகியோரின் சொதப்பல் தொடருவதால் இவர்களது அணியின் தோல்வியும் நீள்கிறது.
இதே போல் 4 தோல்வி, 2 வெற்றி என்று 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சின் ஆட்டமும் தொடர்ந்து சீராக இல்லை. பலம் வாய்ந்த அணியாக இருந்த போதிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் கோட்டை விட்டு விடுகிறது. முந்தைய டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று ரன்-அவுட்டுகள் காரணமாக, நெருங்கி வந்து தோல்வியை தழுவ நேர்ந்தது.
மொத்தத்தில் மனரீதியாக சீர்குலைந்து போய் இருக்கும் பஞ்சாப் அணியின் பலவீனத்தை மும்பை அணி சாதகமாக பயன்படுத்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். எனவே பஞ்சாப் அணி எழுச்சி பெறுமா? அல்லது மறுபடியும் அடங்கி போகுமா? என்பதை பார்க்கலாம்.

Next Story