என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

"உலகப் பால் தினம்: நம் பாரம்பரியப் பால் பொருட்கள் - சிறப்பம்சங்கள்!"
- தினமும் பயன்படுத்தும் பால் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
- குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் அடுத்த இடத்தில் உள்ளது.
'உலக பால் தினம்' இன்று...
நமது வாழ்வில் மிகவும் முக்கியமான உணவுப்பொருள் 'பால்'. மனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை பால் இன்றியமையாததாகி விடுகிறது.
பாலில் புரதம், கொழுப்பு, மக்னீசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சியில் பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. காலையில் டீ போடுவது தொடங்கி, உணவில் தயிர், நெய், மோர், வெண்ணெய் என நாம் தினமும் பயன்படுத்தும் பால் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பசும்பால் மட்டும் அல்லாமல் ஆட்டுப்பால், எருமைபால், கழுதைபால், குதிரைபால் ஏன் ஒட்டகப்பால் வரை விலங்குகளின் பாலை பயன்படுத்திவருகிறோம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக எளிதில் செரிமானமாக கூடிய பாலாக மருத்துவ உலகம் சொல்வதும் பசும்பாலை தான்.
பசும்பாலில் 80 சதவீதம் அளவு தண்ணீர் இருக்கும் பாலில் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்தது. தாய்பாலுக்கு இணையான ஃபோலிக் அமிலங்களும் தயமின், பொட்டாசியம் இதில் இருப்பதால் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் அடுத்த இடத்தில் உள்ளது.
குழந்தை பருவத்தில் இருந்து தினசரி ஒரு டம்ளர் பால் குடிப்பவர்களுக்கு வளர்ந்த பிறகு எலும்பு தேய்மானம் என்னும் பிரச்சனையை சந்திப்பது என்பது சிரமம்தான். குறிப்பாக பெண்கள் மெனோபாஸ் காலங்களில் சந்திக்கும் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் எலும்பு மென்மை, தேய்மானம் பிரச்சனை வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டது ஒரு டம்ளர் பால் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இத்தகைய இன்றியமையாத உணவுப் பொருளான பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி 'உலக பால் தினம்' கொண்டாடப்படுகிறது.
பாலின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலகளாவிய உணவாக பாலை அங்கீகரித்து. அதைத் தொடர்ந்து ஐ.நா. உலக பால் தினத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.






