என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நரம்பியல் பிரச்சினைக்கு தீர்வு
    X

    நரம்பியல் பிரச்சினைக்கு தீர்வு

    • உடலில் கொழுப்பு குறைந்து, தசைகள் சீர்படும்.
    • சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்படும்.

    இன்று நாம் அதிகமாகக் காணும் பல உடல் நலப் பிரச்சினைகளில் நரம்பியல் பிரச்சினைகளும் ஒன்று. மூளை, தண்டுவடம், நரம்புகளை பாதிக்கும் கோளாறுகள் நரம்பியல் பிரச்சினைகள் எனப்படும். தலைவலி, உணர்வின்மை, தசை பலவீனம், நினைவாற்றல் சிக்கல்கள், பேச்சில் பிரச்சினை, நடையில் பிரச்சினை, பார்வை பிரச்சினை, வலிப்பு, மயக்கம், ஒருங்கிணைப்பு குறைபாடுகள் சமநிலை இழப்பு, வலி உணர்வின்மை போன்ற அறிகுறிகள் நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகளே. பக்கவாதம், நடுக்கம், மனச்சோர்வு, பி12 குறைபாடு, மூளை காய்ச்சல் போன்ற வெளிப்பாடுகளும் இருக்கும். இவற்றிற்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.

    பொதுவான நரம்பியல் பிரச்சினைகள்

    * தலைவலி-ஒற்றை தலைவலி, டென்ஷன் தலைவலி

    * வலிப்பு- நினைவாற்றல் குறைபாடு, தசை பலவீனம், நரம்பு பலவீனம், மனச் சோர்வு, பதட்டம், மனநல பிரச்சினைகள் ஆகும்.

    * பொதுவான காரணங்கள் என்பது வைட்டமின் பி12 குறைபாடு, தொற்று நோய்கள், தண்டுவட காயங்கள், மரபணு, வாழ்க்கை முறை காரணங்கள் ஆகும்.

    இதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

    சிகிச்சை- மருந்து, பிசியோதெரபி, அறுவை சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை பழக்கத்தில் உள்ளன.

    * தடுப்பு முறைகள்- ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, முறையான தூக்கம் ஆகியவை அறிவுறுத்தப்படுகின்றன.

    உடல் பலவீனத்தின் அறிகுறிகள்

    நடப்பது, பேசுவது, அன்றாட சாதாரண வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படுவது.

    விழுங்குவதில் சிரமம், ஒருங்கிணைப்பில் சிரமம், சமநிலை தொந்தரவு, இரட்டை பார்வை, தசை இழுத்தல், தசை பிடிப்பு, தன்னிச்சையான நடுக்கம் ஆகியவை ஆகும்.

    தன்னிச்சையாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே மேற்கண்ட அறிகுறிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெறவும்.

    இரண்டு வாரம் சர்க்கரையினை எதிலும் சேர்க்காமல் உண்ணாமல் இருந்து பாருங்களேன். இதில் வெல்லம், பனை சர்க்கரை, தேன் என எதனையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    முதலில் உங்கள் முகத்தில் தெளிவு ஏற்படும். உப்பலாக, சதை தொங்கிய, கூடுதல் வயது காட்டும் முகம் மாறி ஆரோக்கியமான தெளிவாய், இளமையாய் இருக்கும்.

    * உடலில் கொழுப்பு குறைந்து, தசைகள் சீர்படும்.

    * கண் பார்வை தெளிவாகும்.

    * சிறுநீரக ஆரோக்கியம் கூடும்.

    * சிறுநீரில் சர்க்கரை, புரதம் குறையும்.

    *வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    * சோர்வு இன்றி சக்தி இருக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    * வலி, வீக்கங்கள் குறையும்.

    * எடை குறையும்.

    * சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்படும்.

    எடையினை குறைக்க கூடுதலாக இம்முறைகளையும் கையாளலாம். இந்த எடைக்குறைப்பிற்காக ஒவ்வொருவரும் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அன்றாடம் சில குறிப்புகளை கடைபிடித்தாலே எளிதில் எடை குறையும்.

    * ஏற்கனவே சர்க்கரை உணவுகளை தவிர்ப்பதனை பார்த்தோம்.

    * காலை உணவு நல்ல புரதச் சத்து நிறைந்ததாக இருந்தால் மனம் நொறுக்கு தீனி தேடி அலையாது.

    கமலி ஸ்ரீபால்

    * முட்டை, காய்கறி, தயிர், புரத உணவு, மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட பவுடர் வகை உணவு. சீஸ், பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கு முன்னால்- 15 நிடங்களுக்கு முன்பு நீர் அருந்துவது 13 சதவீதம் கலோரி சத்தினை தவிர்க்கும்.

    * மெதுவாய் மென்று உண்பது. டி.வி., போன் இல்லாமல் உண்பது நல்லது.

    * நன்கு நடப்பது. நார் சத்து கொண்ட காய்கறி, பீன்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்வது.

    * குளிர்பானங்களை தவிர்ப்பது.

    * நல்ல உறக்கம்.

    * முழு தானிய உணவு, கொலை பட்டினி இல்லாமல் இருப்பது.

    * பொறுமையாய் இவைகளை தொடர்ந்து கடைபிடிப்பது போன்றவை கை மேல் பலன் தரும்.

    கண்களையும் கவனிப்போம்

    இன்றைக்கு அநேக இளைஞர்கள் சோர்வடைந்த கண், பொங்கிய கண், சிவந்த கண், கண் சோர்வு என பலவித கண் பாதிப்புகளோடு தான் வாழ்கின்றனர். டிஜிட்டல் கண் சோர்வு என இதனை குறிப்பிடுகின்றனர். கைபேசி, கணினி, லேப்டாப், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. வேலை, கல்வி, தகவல் என அனைத்திற்கும் திரைகளை அதிகமாக பயன்படுத்துகின்றோம். டிஜிட்டல் கண் சோர்வில் தற்கால பாதிப்புகளாக எரிச்சல், உலர்வு, நீர் வருதல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி என்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மொபைல் போன் அதிகமாய் பயன்படுத்துபவர்கள் இதில் அதிகமாய் பாதிக்கப்படுகின்றனர். திரையினை பார்க்கும் போது நாம் கண் இமைப்பதனை இயல்பாகவே குறைத்து விடுகின்றோம். இதனால் கண்கள் வறண்டு விடுகின்றது. மேலும் திரையின் ஒளி, எழுத்தின் அளவு, தவறாக உட்காரும் நிலை ஆகியவை கண் சோர்வினை அதிகரிக்கின்றன.

    கண் சோர்வினைத் தவிர்க்க 20-20-20 விதியைப் பின் பற்றுங்கள். அதாவது 20 நிமிடங்களுக்கொரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்கவும். திரையில் அதிக பிரகாசம் வேண்டாம். எழுத்தின் அளவு உங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இவைகளின் மூலம் கண் சோர்வினைத் தவிர்க்க முடியும். நாம் உலகத்தினை அறிந்து கொள்ளும் முக்கியமான வழிகளில் ஒன்று பார்வைத்திறனே. இன்றைய வாழ்க்கை முறை, அதிக திரை நேரம், தூக்கக் குறைவு போன்ற காரணங்களால் கண் பிரச்சினை அதிகரித்து வருகின்றது. பல சமயங்களில் சிறிய பிரச்சினைகளை நாம் அலட்சியப்படுத்துவதால் பின்னர் பெரிய பிரச்சினைகளாக மாறுகின்றன.

    * பார்வை குறைபாடு. அருகில் அல்லது தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியாத நிலை போன்றவை சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் ஏற்படலாம்.

    * கண் தொற்றுகள் தூசு, அழுக்கு, கைகளை கண்ணில் அடிக்கடி வைப்பது போன்ற காரணங்களால் கண் சிவத்தல், நீர் வருதல், வலி போன்றவை ஏற்படும்.

    * வயதுடன் வரும் கண் மாற்றங்கள், கண்ணழிவு (கட்டராக்ட்) போன்றவை தோன்றலாம்.

    * கண் ஆரோக்கியத்திற்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக அவசியம்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்ற வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த உணவு அவசியம்.

    * திரை நேரத்தினை கட்டுப்படுத்த வேண்டும்.

    * இடைவெளி எடுத்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்.

    * தூசு, வெய்யிலில் இருந்து கண்களை பாதுகாக்க தரமான கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம்.

    * கண்களை கைகளால் தேய்க்கக் கூடாது.

    * சிறு அறிகுறியாயினும் மருத்துவர் ஆலோசனை பெறுவது பல பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்கும்.

    * கண் அழுத்த நோய் (கிரைகோமா) என்பது கண்களில் அழுத்தம் அதிகரிப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கவனிக்காமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    * மூப்பு சார்ந்த நடு பார்வை பாதிக்கப்படுவதால் நேராக பார்க்கும் திறன் குறையலாம். படிப்பதும், முகங்களை அடையாளம் காண்பதும் சிரமமாக இருக்கலாம்.

    * கண் வறண்டு விடுவதால் எரிச்சல், சிவத்தல் ஏற்படலாம். எனவே முதியோர் ஆண்டுக்கொரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ.சி.ஈ. மற்றும் ஓமேகா 3 இருக்கும். உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * கண்களில் வலி, பார்வை குறைவு, கருப்பு புள்ளி தோன்றுதல் போன்றவை இருந்தால் உடனடியாக கண் மருத்து வரை அணுக வேண்டும்.

    காலையில் ஒரு மணி நேரத்தினை எப்படி ஆரம் பிக்கலாம் தெரியுமா?

    * 5 நிமிடம் உங்கள் படுக்கையை உதறி, பெட்ஷீட் மாற்றி சரி செய்யுங்கள்.

    * 5 நிமிடம் உடலை நீட்டி, மடக்கி சில யோகா பயிற்சிகள் செய்யலாம்.

    * 5 நிமிடம் அன்றைய வேலைகளை எழுதலாம்.

    * 15 நிமிடம் ஷவர் குளியல், உடலை நன்கு துடைத்து மான்ட்ரையர் தடவி தயாராகுதல் வேண்டும்.

    * 25 நிமிடங்கள் சத்தான காலை உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் நேரம் கிடைத்தால் 10 நிமிடம் துரித உடற்பயிற்சி.

    * 20 நிமிடம் நடைபயிற்சி.

    * 20 நிமிடம் நல்ல புத்தகம் படிக்கலாம். ஆக நேரம் பொன்னானது. முறையாய் பயன்படுத்துவோம்.

    மனதினை சமநிலைப்படுத்துங்கள்!

    உங்கள் மனதினை சமநிலை படுத்திக் கொள்ள:

    * அதிகம் பேச வேண்டாம். அப்படி பேசினால் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.

    * ரொம்பவும் யோசித்தால் மன அழுத்தம் ஏற்படும்.

    * ஒருவருக்கு அதிக வேலையினை விழுந்து விழுந்து கொடுத்தால் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

    * ரொம்பவும் அளவுக்கு மீறி கடும் வேலை செய்தால் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும்.

    * அதிக அன்பு ஒருவர் மீது செலுத்தினால் காட்டாற்றில் வெள்ளம் போல் அடித்து செல்லப்படும்.

    * ரொம்பவும் 'ஜோக்' அடித்து விளையாட்டுத்தனமாக அடுத்தவரை மகிழ்விப்பதிலேயே இருந்தால் நம் பேச்சை யாரும் சீரியசாக கவனம் கொடுத்து எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    * அதிகம் தூங்கினால் வெட்டியாக காலம் கழியும்.

    * ஒருவரை மிகவும் நம்பினால் அவரால் துரோகம், கைவிடப்படும் வாய்ப்பு அதிகம்.

    * அதிக ஒப்பனை இயற்கை அழகினைக் கெடுக்கும்.

    * அதிக அழுத்தம் கொடுத்தால் எந்த செயலும் முறையாய் நிறைவேறாது.

    * அதிகம் செலவழித்தால் வருங்காலமே இல்லை. இதுதான் வாழ்க்கை.

    Next Story
    ×