என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பா.ஜ.க. முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து திடீர் விலகல்
    X

    புதுச்சேரி பா.ஜ.க. முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து 'திடீர்' விலகல்

    • புதுவை வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.
    • புதுவை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜ.க. தலைவராகவும், முன்னாள் நியமன எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் சாமிநாதன்.

    இவர் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க.வில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 25 ஆண்டுக்கு மேலாக நான் இருந்த பா.ஜ.க.வில் இருந்து முழுமையாக விலகுகிறேன். 25 ஆண்டுக்கும் மேலாக பா.ஜ.க.வில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த நிர்வாகிகளுக்கும், பதவி அளித்த பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    புதுவை வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். புதுவை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான, புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சாமிநாதன் தொடர்ந்து 8½ ஆண்டுகளாக புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக பதவியில் இருந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக கட்சி பொறுப்புகளில் இருந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×