என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புயல், கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியில் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்
    X

    புயல், கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியில் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்

    • மார்க்கெட், மளிகை கடைகள், பேக்கரி, மருந்தகங்கள் என பல கடைகளில் நேற்று மாலையே பொருட்கள் தீர்ந்து விட்டன.
    • புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் மக்கள் வாகன ஓட்டிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    புதுச்சேரி:

    'டிட்வா' புயல் எச்சரிக்கை காரணமாக இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதையொட்டி இன்றும், நாளையும் அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதையடுத்து 2 நாட்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று மாலை முதல் புதுச்சேரியில் உள்ள கடைகளில் மக்கள் குவிந்தனர். இதில் மளிகை, காய்கறி, மருந்து மற்றும் நொறுக்குத்தீனிகள், மெழுகுவர்த்தி உள்ளிட்டவைகளை ஒரே நாளில் வாங்கி குவித்தனர்.

    இதனால் மார்க்கெட், மளிகை கடைகள், பேக்கரி, மருந்தகங்கள் என பல கடைகளில் நேற்று மாலையே பொருட்கள் தீர்ந்து விட்டன.

    அதே போல் பால், பிரட் உள்ளிட்ட பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் மக்கள் வாகன ஓட்டிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    Next Story
    ×