என் மலர்
புதுச்சேரி

புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் ரூ.47 கோடிக்கு மது விற்பனை
- சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும்.
- கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி என்றாலே மதுபானத்துக்கு பெயர் பெற்றதாகும். இங்கு பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் புதுச்சேரிக்கு வந்து மதுகுடிப்பது வழக்கம். சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் அது சற்று உயரும்.
இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த ஒருவாரமாக புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் அமோகமாக நடந்தது.
மது விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது.
Next Story






