என் மலர்tooltip icon

    இந்தியா

    10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதுபவர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்
    X

    10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதுபவர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

    • மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவில் அருகே சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்டனர்.
    • மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடி நாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

    இந்த திட்டத்தில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கோவிந்த நாமம் எழுதி வரலாம். கோவிந்த நாமம் எழுதுவதற்கான புத்தகங்கள் திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் புத்தகக் கடைகள் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. 200 பக்கம் கொண்ட புத்தகத்தில் 39 ஆயிரத்து 600 வாசகங்களை நிரப்ப முடியும். அதன்படி வாசகம் எழுதுபவர்கள் 26 புத்தகங்களை வாங்க வேண்டும். 10 லட்சம் வாசகங்களை எழுத 3 ஆண்டுகள் ஆகும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவிந்த நாமம் எழுதி வந்து தேவஸ்தானத்தில் ஒப்படைப்பவர்களுக்கு மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் சேர்ந்த கீர்த்தனா என்ற கல்லூரி மாணவி 10,01,116 தடவை கோவிந்த நாமம் எழுதி வந்து வி.ஐ.பி பிரேக் தரிசனம் பெற்றார். அதேபோல் மேலும் 2 பேர் பிரேக் தரிசனம் பெற்றனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதைகளில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெற்றோர்களுடன் அலிபிரி நடப்பாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதனால் நடைபாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். நேற்று மதியம் அலிபிரியில் இருந்து சில பக்தர்கள் மலைக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவில் அருகே சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்டனர். இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அலிபிரி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவசம் போர்டு அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுடன் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    நடைபாதை பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

    Next Story
    ×