என் மலர்tooltip icon

    இந்தியா

    லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

    • 5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    • இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிதி மந்திரி கூறி உள்ளார்.

    Live Updates

    • 1 Feb 2023 11:44 AM IST

      அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 11:41 AM IST

      பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.

    • 1 Feb 2023 11:39 AM IST

      தரவு மேலாண்மை கொள்கை வகுக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 11:39 AM IST

      செயற்கை நுண்ணறிவிற்காக மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன.

    • 1 Feb 2023 11:38 AM IST

      பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    • 1 Feb 2023 11:37 AM IST

      மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 11:37 AM IST

      நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 11:37 AM IST

      ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

    • 1 Feb 2023 11:35 AM IST

      பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 11:34 AM IST

      சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு

    Next Story
    ×