search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

    • 5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    • இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிதி மந்திரி கூறி உள்ளார்.

    Live Updates

    • 1 Feb 2023 6:37 AM GMT

      மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

    • 1 Feb 2023 6:35 AM GMT

      பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் முதலீடு செய்யும் வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்படும்.

    • 1 Feb 2023 6:34 AM GMT

      மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 6:33 AM GMT

      போக்குவரத்து துறைக்கு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 6:33 AM GMT

      வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை

    • 1 Feb 2023 6:32 AM GMT

      சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9000 கோடி நிதி ஒதுக்கீடு

    • 1 Feb 2023 6:30 AM GMT

      சுற்றுலாவை மேம்படுத்த யூனிட்டி மால்ஸ் என்ற பெயரில் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்

    • 1 Feb 2023 6:28 AM GMT

      பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2023 6:27 AM GMT

      சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன

    • 1 Feb 2023 6:27 AM GMT

      பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்

    Next Story
    ×