தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை

2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.
தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை
Published on: 

ஆந்திர மாநிலம், பலமனேறு அருகே உள்ள கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி கவுனிதிம்மேபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிய வகையை சேர்ந்த முதுகு தங்கம் போல் மின்னும் தவளையை கண்டு பிடித்தனர்.

2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளது. இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் என்பதாகும்.

இந்திய துணை கண்டத்தில் இதுவரை 19 வகையான தங்க முதுகு தவளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com