என் மலர்

  இந்தியா

  மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து- தம்பியுடன் படுக்கையை பகிருமாறு இளம்பெண்ணை கட்டாயப்படுத்திய கணவர்
  X

  மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து- தம்பியுடன் படுக்கையை பகிருமாறு இளம்பெண்ணை கட்டாயப்படுத்திய கணவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டெல்லியில் அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு தொழில் அதிபர் தனது இளம் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்து செல்வது வழக்கம்.
  • இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் மனைவியை மிரட்டி அவர் இதுபோன்ற விருந்தில் பங்கேற்க வைத்தார்.

  புதுடெல்லி:

  கேரளாவில் சமீபத்தில் மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவம் டெல்லியிலும் நடந்தது இப்போது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  உத்தரபிரதேச மாநிலம் குர்காம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு 30 வயதில் மனைவி உள்ளார்.

  டெல்லியில் அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு தொழில் அதிபர் தனது இளம் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்து செல்வது வழக்கம். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் மனைவியை மிரட்டி அவர் இதுபோன்ற விருந்தில் பங்கேற்க வைத்தார்.

  சம்பவத்தன்று அவர் தனது தம்பியுடன் ஜாலியாக இருக்குமாறு மனைவியை வற்புறுத்தினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தார். இதனால் அந்த தொழில் அதிபர் மனைவியை உடல் ரீதியாக சித்ரவதை செய்தார்.

  இனியும் கணவரின் இந்த வக்கிரத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என பொங்கி எழுந்த அப்பெண் இது பற்றி போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

  எனது கணவர் என்னை கட்டாயப்படுத்தி டெல்லியில் நடந்த மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு அழைத்து சென்றார். இதனால் நான் உடல்ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டேன். என்னை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார்.

  சம்பவத்தன்று நான் போலீசில் புகார் செய்ய சென்றேன். இதையறிந்த எனது கணவர் குண்டர்களுடன் என்னை வழிமறித்து இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். மேலும் நான் வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இது தொடர்பாக உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவுபடி போலீசார் தொழில் அதிபர் மற்றும் அவரது தம்பி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×