என் மலர்
இந்தியா

தொழில்நுட்ப கோளாறு- விமானம் அவசரமாக ஐதராபாத்தில் தரையிறக்கம்
- தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:
கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 137 பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து காலை 6.15 மணியளவில் விமானம் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.
Next Story






