என் மலர்tooltip icon

    இந்தியா

    திருவனந்தபுரத்தில் மத்திய மந்திரி முரளீதரன் வீடு மீது தாக்குதல்- படிக்கட்டில் ரத்த கறைகள் காணப்பட்டதால் பரபரப்பு
    X

    மத்திய மந்திரி முரளீதரன் வீட்டில் விசாரணை நடத்தும் போலீசார்.

    திருவனந்தபுரத்தில் மத்திய மந்திரி முரளீதரன் வீடு மீது தாக்குதல்- படிக்கட்டில் ரத்த கறைகள் காணப்பட்டதால் பரபரப்பு

    • வீட்டை பார்வையிட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மத்திய மந்திரி வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா? அங்கு ரத்த கறை எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளீதரன், வெளியுறவு துறை இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இவர் டெல்லியில் இருந்து கேரளா வரும்போது திருவனந்தபுரம் கொச்சுளூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்குவது வழக்கம்.

    முரளீதரன் டெல்லியில் இருக்கும் போது இந்த வீடு பூட்டியே இருக்கும். அப்போது வீட்டில் வேலை செய்யும் பெண், காலையில் வந்து வீட்டை பெருக்கி சுத்தம் செய்து செல்வது வழக்கம்.

    அதன்படி வேலைக்கார பெண் நேற்று மத்திய மந்திரி முரளீதரன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி கிடந்தன.

    மேலும் வீட்டில் கார் நிறுத்தும் பகுதி மற்றும் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளில் ரத்த கறைகள் காணப்பட்டன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண், இது பற்றி மந்திரியின் உதவியாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். வீட்டை பார்வையிட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய மந்திரி வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா? அங்கு ரத்த கறை எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×