search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதியோருக்கான வைப்பு நிதி ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
    X

    முதியோருக்கான வைப்பு நிதி ரூ.30 லட்சமாக அதிகரிப்பு

    • 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
    • 2 ஆண்டுகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

    அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×