என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரேன் மூலம் உண்டியல் காணிக்கையை எடுத்து செல்ல எதிர்ப்பு
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரேன் மூலம் உண்டியல் காணிக்கையை எடுத்து செல்ல எதிர்ப்பு

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    • திருப்பதியில் நேற்று 67,511 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்கம் வெள்ளி, நகைகள், பணம், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    உண்டியல் காணிக்கை நாணயங்கள் எந்திரம் மூலமும் ரூபாய் நோட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் எண்ணி கணக்கிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்காக பரகாமணி என்ற புதிய கட்டிடத்தை தேவஸ்தானம் கட்டி உள்ளது.

    தற்போது காணிக்கை பணத்துடன் உண்டியல் கோவிலில் இருந்து பரகாமணி கட்டிடத்திற்கு கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

    உண்டியல் காணிக்கையை எண்ணுவதற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடம் வாஸ்து பரிகார படி கட்டப்படவில்லை என்றும் கிரேன் மூலம் உண்டியல் காணிக்கையை எடுத்துச் செல்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்பதால் தீமைகள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் ஆமக ஆலோசகர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 67,511 பேர் தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×