என் மலர்
இந்தியா

பியூட்டி பார்லருக்குள் புகுந்து இளம்பெண் வெட்டி கொலை
- கோட்டைய்யா தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
- மது போதையில் இருந்த கோட்டைய்யா சுவாதி நடத்தி வரும் பியூட்டி பார்லருக்கு சென்றார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் தெனாலி மாவட்டம், நாசூர் பேட்டையை சேர்ந்தவர் வெங்கட கோட்டைய்யா.
இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுவாதி (வயது 35). சுவாதி தெனாலி, காந்திநகர் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோட்டைய்யாவுக்கு, சுவாதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பியூட்டி பார்லரை மூடி விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என கோட்டைய்யா சுவாதிக்கு கட்டளையிட்டார்.
ஆனால் கணவரின் கட்டளையை மீறி சுவாதி தொடர்ந்து பியூட்டி பார்லரை நடத்தி வந்தார். இதனால் கோட்டைய்யா தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் மது போதையில் இருந்த கோட்டைய்யா சுவாதி நடத்தி வரும் பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது பியூட்டி பார்லரில் இருந்த 2 பெண்களை வெளியே அனுப்பிவிட்டு கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.
பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுவாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தான் கொண்டு வந்த பூமாலையை மனைவியின் உடலில் மீது வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மனைவியை கொலை செய்த கத்தியுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






