search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எந்த நேரத்தில் அதிகளவு மது விற்பனை நடக்கிறது- ஆந்திர மதுபான கடைகளில் கணக்கெடுப்பு
    X

    எந்த நேரத்தில் அதிகளவு மது விற்பனை நடக்கிறது- ஆந்திர மதுபான கடைகளில் கணக்கெடுப்பு

    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
    • மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

    பின்னர் மதுபானங்களின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் போதைக்கு அடிமையானவர்கள் எப்போது அதிகம் குடிப்பார்கள்.

    இன்னமும் அதிகமாக மது விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் மதுபான விற்பனை குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    அரசு மதுக்கடைகளுக்கு எந்த நேரத்தில் அதிக மக்கள் வருகிறார்கள்.

    அதில் மதியம் 12 மணிக்கு முன்பாகவா, மதியம் 12-2 மணிக்குள், மதியம் 2-4 மணிக்குள், மாலை 4-6 மணிக்குள், மாலை 6 மணிக்குப் பிறகா. இரவு நேரத்தில் அதிகம் விற்பனை நடக்கிறதா.

    எந்த வகையான ஆல்கஹால் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.எந்த வயதினர் அதிகமாக வருகிறார்கள், 21-35, 36-50, 51-00,, எந்த வகையான ஆல்கஹால் பெரும்பாலும் வாங்கப்படுகிறது? பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர். தேவைக்கு ஏற்ப மது சப்ளை செய்யப்படுகிறதா, இல்லையா? போன்ற தலைப்புகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது எங்கே குறைபாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சந்தைப்படுத்தல் உத்திகளை வகுத்து விற்பனையை அதிகரிப்பதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாக உள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

    மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுபான உற்பத்தி கழக எம்டி வாசுதேவ ரெட்டி டெலிகான்பரன்ஸ் நடத்தி, இந்த கேள்வித்தாளுக்கு பதில் அனுப்புமாறு மேற்பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்டப் பெயர், மதுபானக் கிடங்கு, மதுக்கடை உரிம எண் போன்ற விவரங்களை இணைத்து இந்தக் கணக்கெடுப்புக்கு கண்காணிப்பாளர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    Next Story
    ×