என் மலர்
இந்தியா

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சிவசேனா வழக்கு 1-ந்தேதிக்கு தள்ளி வைப்பு
- தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
- உத்தவ் தாக்கரே தரப்பில் கபில் சிபல் ஆஜரானார். புதிய அரசை கவர்னர் பதவி ஏற்க அழைத்து இருக்கக் கூடாது என்று வாதிட்டார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. அதிருப்தி குழு தலைவரான ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். அதிருப்தி குழுவை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று அவர்கள் முறையிட்டனர்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உத்தவ் தாக்கரே தரப்பில் கபில் சிபல் ஆஜரானார். புதிய அரசை கவர்னர் பதவி ஏற்க அழைத்து இருக்கக் கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதத்துக்கு பிறகு இந்த வழக்கு வருகிற 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Next Story






