என் மலர்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு கவுண்டரில் வரிசையில் நின்ற சேலம் பக்தர் திடீர் மரணம்
- சேலத்தை சேர்ந்தவர் கோபால் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார்.
- வரிசையில் நின்று கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்தார்.
திருப்பதி:
சேலத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 58) நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார்.
சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்குவதற்காக கோவில் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள லட்டு கவுண்டருக்கு சென்றார். அங்கு கூட்டமாக இருந்தது.
வரிசையில் நின்று கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்தார்.
தேவஸ்தான ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைக் கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
அவரது உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தேவஸ்தானம் இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்தது. இதைத் தொடர்ந்து கோபால் உடல் சேலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story






