search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் கழிவறையில் வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்தது
    X

    கேரளாவில் பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் கழிவறையில் வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்தது

    • பெண்ணுடன் வந்த அவரது மூத்த மகன், தாயாருக்கு பிறந்த குழந்தை கழிவறையில் வீசப்பட்டதாக டாக்டர்களிடம் கூறினார்.
    • அதிர்ச்சி அடைந்த டாக்டர், குழந்தைகள் நல அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    வீட்டிலேயே குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தது. இதனால் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இப்போது ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு வந்ததாகவும் கூறினார்.

    ஆனால் பெண்ணுடன் வந்த அவரது மூத்த மகன், தாயாருக்கு பிறந்த குழந்தை கழிவறையில் வீசப்பட்டதாக டாக்டர்களிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர், குழந்தைகள் நல அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    உடனே அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பெண்ணின் வீட்டு கழிவறையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குழந்தை உயிர் பிழைத்தது. இதையடுத்து அந்த குழந்தையை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தத்து எடுத்துக்கொண்டது.

    இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில் பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் உதாசீனப்படுத்தப்பட்ட குழந்தையை போராடி மீட்டு உயிர் பிழைக்க வைத்த டாக்டர்கள் மற்றும் போலீசாரை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×