search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் வாபஸ்
    X

    எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் வாபஸ்

    • கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • மருத்துவ மாணவர்களின் இந்த புதிய வழிகாட்டு முறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2023-2024)மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய புதிய வழிகாட்டு விதிமுறைகளை தேசிய மருத்துவ கழகம் கடந்த 12- ந்தேதி வெளியிட்டது. தற்போது மாணவர்கள் சேர்க்கையில் முதலில் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் . அதன்படி முதலிடங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும், தற்போதைய நடைமுறையில் நீட் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை முடிவு செய்யப்படும்.

    இதிலும் சம நிலையில் இருந்தால் அடுத்ததாக வேதியியலும் அடுத்து இயற்பியல் பாடத்தில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் இறுதி செய்யப்படும்.

    ஒரு வேளை இதன் பிறகும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சமநிலையில் இருந்தாலும் வயது மூப்பு அடிப்படையில் மாணவர் தர வரிசை பட்டியல் இடம் பெறும்.

    இந்த நடைமுறையை மாற்றி புதிய நடைமுறை வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் இயற்பியல் அடுத்து வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றும் அதன்பிறகும் சம நிலையில் இருந்தால் கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மருத்துவ படிப்பில் சேர ஒருவருக்கு 4 முறை மட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், 9 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்றும் தோல்வி அடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களில் மறு தேர்வு எழுத வேண்டும் என்றும் புதிய நடைமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்து ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தரவேண்டும், 4½ ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பு 3 கட்டமாக நடத்தப்படும். முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என பிரித்தும் 3- வது கட்டம் 30 மாதங்கள் எனவும் வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவ மாணவர்களின் இந்த புதிய வழிகாட்டு முறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதில் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரோஷன் கிருஷ்ணன் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் புதிய வழிகாட்டு நடை முறைகள் குழப்பத்தை உருவாக்குகிறது. சரியான கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, மருத்துவ பாட திட்டத்திற்கான வலுவான மற்றும் சரியான வழி காட்டுதல்களை கொண்டு வருவது, புதிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதும் அதை எந்தவித விளக்கமும் கூறாமல் திரும்ப பெறுவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே தேசிய மருத்துவ ஆணையம் உறுதியாக தெரியாத தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சூழ்நிலையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வாபஸ் பெற்று உள்ளது. விரைவில் புதிய விதி முறைகள் வெளியாகலாம் என தெரிகிறது.

    Next Story
    ×