என் மலர்

  இந்தியா

  ஆபாச படத்தில் டி.வி.நடிகரை மிரட்டி நடிக்க வைத்த பெண் டைரக்டர்- போலீசார் விசாரணை
  X

  ஆபாச படத்தில் டி.வி.நடிகரை மிரட்டி நடிக்க வைத்த பெண் டைரக்டர்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டீசர் வெளியானதும் என்னை பெற்றோர் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர்.
  • நான் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி உள்ளேன். என்னை மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை வெளியிட கூடாது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த டி.வி. நடிகர் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

  டெலிவிஷன் தொடர்களில் நான் நடித்து வருகிறேன். என்னை கதாநாயகனாக வைத்து ஒரு வெப் சிரியல் எடுப்பதாக பெண் டைரக்டர் ஒருவர் கூறினார். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

  தொடர்ந்து என்னை ஒரு ரிசார்ட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். அதன்பின்பு தான் நான் நடிக்க இருப்பது ஆபாச படம் என தெரியவந்தது.

  அந்த படத்தில் முதல் நாளிலேயே ஒரு பெண்ணுடன் என்னை ஆபாசமாக நடிக்க வைத்தனர். அதற்கு நான் மறுத்த போது, ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதாக கூறினர். அதன்பின்பும் நடிக்க மறுத்தால் இதுவரை படம் எடுக்க செலவான தொகையான ரூ.5 லட்சத்தை தந்து விட்டு படபிடிப்பில் இருந்து ஒதுங்கி கொள்ளுமாறு கூறினர்.

  என்னிடம் பணம் இல்லாததால் நான் அவர்கள் கூறியபடி படத்தில் நடித்தேன். இப்போது அந்த படம் வெளியாக இருப்பதாக டீசர் வெளியிட்டு உள்ளனர்.

  அந்த டீசர் வெளியானதும் என்னை பெற்றோர் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். இப்போது நான் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி உள்ளேன். என்னை மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை வெளியிட கூடாது. அப்படி அது வெளியானால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.

  மேலும் என்னை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் டைரக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

  அந்த புகாரின் பேரில் போலீசார் படத்தின் டைரக்டர் மற்றும் ஓடிடி தளம் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  இதற்கிடையே குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் டைரக்டர் கூறும்போது, படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகரிடம், படத்தில் 90 சதவீதம் நிர்வாண காட்சிகள் இருக்கும் என்றும் அதில் நடிக்க விரும்பினால் நடிக்கலாம் என்றும் தெரிவித்தோம். அவர் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே அவரை நடிக்க வைத்தோம் என்றார்.

  இந்த பிரச்சினை தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×