என் மலர்
இந்தியா

பிரியாணியில் பூரான் கிடந்த காட்சி.
பிரியாணியில் கிடந்த பூரான்- அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
- பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், பாச தாவாரி பேட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள சந்திப்பில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்றனர்.
அங்கு தனது குடும்பத்தினருக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் உங்கள் ஓட்டலில் பூரான் பிரியாணி சமைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். அவர்களின் கேள்விக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது. பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






