என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் சிறுமியை கொன்று புதைத்த கள்ளக்காதல் ஜோடி
    X

    ஆந்திராவில் சிறுமியை கொன்று புதைத்த கள்ளக்காதல் ஜோடி

    • போலீசார் பிந்துவின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளகாதலர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம், கல்யாண துர்காவை சேர்ந்தவர் மாருதி நாயக்.லாரி டிரைவர்.இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 மகன்களும், பிந்து (வயது 4) என மகள் இருந்தனர்.

    இந்த நிலையில் மாருதி நாயக் தனது நண்பரான வினோத்தை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இதனால் கவிதாவுக்கும் வினோத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. மாருதி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த மாருதி நாயக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புரோட்டூரில் வீட்டை காலி செய்து விட்டு காசி பேட்டை பகுதிக்கு குடி பெயர்ந்தனர்.

    இதையடுத்து தனது மகள் பிந்து மற்றும் ஒரு மகனுடன் கவிதா திடீரென வினோத்துடன் மாயமானார். மாயமான இவர்கள் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம், பத்வேலு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். கவிதா வசிக்கும் இருப்பிடத்தை அறிந்த அவரது கணவர் மாருதி நாயக் அவரது வீட்டிற்குச் சென்று தனது மகள் எங்கே என கேட்டார்.அதற்கு கவிதா முன்னுக்கு முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த மாருதி நாயக் இது குறித்து பத்வேலு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வினோத் மற்றும் கவிதாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த வாரம் பிந்து தினமும் இரவில் அப்பா அப்பா என அழுது கொண்டே இருந்ததால் இருவரும் சேர்ந்து பிந்துவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் பிந்துவின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளகாதலர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×