என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் தொழில் அதிபர்-பாதுகாவலர் சுட்டுக்கொலை
    X

    பீகாரில் தொழில் அதிபர்-பாதுகாவலர் சுட்டுக்கொலை

    • துப்பாக்கி சூட்டில் தொழில் அதிபரின் வக்கீல் சையது உசேன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


    பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அகுதோஷ் சாகி.தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் அகுதோஷ் சாகி மற்றும் அவரது பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் தொழில் அதிபரின் வக்கீல் சையது உசேன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொழில் அதிபர் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையுண்ட அகுரோஷ்சாகி கடந்த பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

    Next Story
    ×