என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் மணமகன் குடிபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அசாமில் மணமகன் குடிபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

    • மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்துள்ளார்.
    • மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் வீட்டார் மீது போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

    அசாம் மாநிலத்தின் நல்வாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியை சேர்ந்தவர் பிரசென்ஜித் ஹலோய். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது.

    அப்போது மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்துள்ளார். ஒரு வழியாக தட்டுத்தடுமாறி மேடையில் அமர்ந்த அவர் புரோகிதர் கூறிய மந்திரங்களை உச்சரிக்க முடியாமல் தூங்கி வழிந்தார். அவரது அருகே உறவுக்காரர் ஒருவர் உதவியாக இருந்த போதிலும் மணமகன் தனது திருமண சடங்குகளை செய்வதற்கும் சிரமப்பட்டார். இதுகுறித்து மணமகனின் பெற்றோரிடம் புகார் செய்ய முற்பட்ட போது மணமகனின் தந்தையும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனை பார்த்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தனது திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அவரது முடிவுக்கு அந்த கிராமத்தின் தலைவர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் தனது மகளின் திருமணம் நின்றதால் மணமகளின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் வீட்டார் மீது போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×